amma





திமுகவில் தொகுதி பங்கீடு

சென்னை, செப். 26-

முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை அறிவித்தார்.

இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி கூறிய தாவது:-

முதல்நிலை நகராட்சி

மொத்தம்- 102

தி.மு.க.- 52

காங்கிரஸ்- 25

பா.ம.க.- 12

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- 8

இந்திய கம்யூனிஸ்டு- 5

3-ம் நிலை நகராட்சி

மொத்தம்- 50

தி.மு.க.- 23

காங்கிரஸ்- 13

பா.ம.க.- 6

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- 4

இந்திய கம்யூனிஸ்டு- 4

பேரூராட்சி

தலைவர் பதவி

மொத்தம்- 561

தி.மு.க.- 284

காங்கிரஸ்- 134

பா.ம.க.- 70

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- 45

இந்திய கம்யூனிஸ்டு- 28

ஊராட்சி ஒன்றிய

தலைவர்கள்

மொத்தம்- 385

தி.மு.க.- 185

காங்கிரஸ்- 95

பா.ம.க.- 60

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- 25

இந்திய கம்யூனிஸ்டு- 20

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி

மொத்தம்- 29

தி.மு.க.- 12

காங்கிரஸ்- 7

பா.ம.க.- 5

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- 3

இந்திய கம்யூனிஸ்டு- 2

மாநகராட்சி

மேயர் பதவி

மொத்தம்- 6

தி.மு.க.- 4

காங்கிரஸ்- 2

தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு), எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

வைகோ பேச்சு

முதுகுளத்தூர், ஆக. 17-

ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர் கூட்டம் முதுகுளத்தூர் தேவர் மகாலில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கராத்தே பழனிசாமி முன்னிலை வகித் தார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

இலங்கையில் தமிழர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று இனவெறி யோடு சிங்கள ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். எனவே எந்த சூழ்நிலையிலும் சிங்கள ராணுவத்துக்கு இந்தியா உதவக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொள்கிறேன். அப்படி உதவி னால் கிராமம், கிராமமாக சென்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவேன்.

ம.தி.மு.க.வை சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கும் சேர்த்து மத்திய மந்திரி பதவியை வாங்கிய கருணாநிதி ம.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்.

பா.ம.க., காங்கிரஸ், கம்ïனிஸ்டு கட்சிகள் என யார் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் விமர்சிக்காத கருணாநிதி, ம.தி.மு.க. கூட்டணி வைத்தால் மட்டும் பணம் வாங்கி விட்டதாக கூறி வருகிறார். எந்த சூழ்நிலையிலும் ம.தி.மு.க. நிலைத்து நிற்கும்.

ம.தி.மு.க. திட்டமிட்டு தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. ஆனால் கடந்த 1993-ம் ஆண்டு முதல் கட்டுப்பாடான இளைஞர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாதி, மத மோதல்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க நமது இளைஞர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

ஏன் கொடுக்கக் கூடாது நம்மிடம் உள்ள இத்துப்போன துப்பாக்கி வெடிக்காத குண்டுகளை கொடுத்து காசு சம்பாதிக்க வேண்டியது தானே.

நீண்ட நாள் முடிந்து

ஒன்றுமில்லை சும்மா தானுங்க இங்கே நான்

பைக் சாகசம்






வீர சாகசங்கள் நன்றி தின மணி

4 % அகவிலைப்படி

சென்னை, ஜன.13-

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 11.58 மணிக்கு கூடியது.

கவர்னர் பர்னாலா 11.56 மணிக்கு கோட்டைக்கு வந்தார் அவரை சபாநாயகர் காளிமுத்து, சட்டமன்ற செயலாளர் ராஜாராமன் ஆகியோர் அழைத்து வந்தனர்

முதல் அமைச்சர் ஜெயலலதா உள்பட அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் 11.50 மணிக்கே சபைக்கு வந்திருந்தனர்.
கவர்னர் சட்டமன்றத்துக்குள் நுழைந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று கும்பிட்டு வரவேற்றனர். பதிலுக்கு கவர்னரும் கும்பிட்டவாறு சபாநாயகர் இருக்கைக்குச் சென்றார். தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் 11.58 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்தினார். 54 பக்கம் கொண்ட ஆங்கில உரையை அவர் வாசித்தார். உரையின் தொடக்கத்தில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

தமிழக மக்களின் பயனுக்காக வளர்ச்சி இலங்குகளை எய்துவதில் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க அரசுப்பணி யாளர்களின் பங்களிப்பை இவ்வரசு மிகவும் மதிக்கிறது. மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு வழங்கிய அகவிலைப்படி உயவர்வுத் தவணைகளை, இவ்வரசு சந்திக்க வேண்டியிருந்த நிதி நெருக்கடியின் காரணமாக, உடனுக்குடன் வழங்க இயலாமாற்போயிற்று.

பின்னர் இவ்வரசு அயராத பெரும் முயற்சிகளை மேற்கொண்டு நிதி நிலையைச் சரி செய்து, அக விலைப்படி உயர்வுகள் படிப்படியாகக் குறைந்த கால இடைவெளியுடன் அளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

தற்போது மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஓய்வூதி யர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 1-1-2006 முதல் அடிப்படைச் சம்பளத்தின் 67 சதவீதத் திலிருந்து 71 சதவீதமாக உயர்த்து இவ்வரசு முடிவு செய்துள்ளது.

இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.282 கோடி கூடுதல் செலவாகும்.

அதிகமாக அரசு ஊழியர்களுக்கு அளக்கப்போவதாக தகவல் வந்தது ஒன்றையும் காணவில்லை. பிறகு அம்மா அறிவிப்பாங்களோ?

எனது பொங்கல் வாழ்த்துகள்

பலர் பலமுறை முயன்றும் சரியாக தொடுப்பு கிடைக்க வில்லை என்பதைப் படித்துப் பார்த்தேன் . ஆனால் என்ன ஆச்சரியம் எனக்கு உடனே கிடைத்து விட்டது.

உஙகள் அணைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

மடாலயங்கள்

இந்து தேச சரித்திரத்தில் அரசாங்கங்களை விட மடாலயங்கள் மேலான ஸ்தானம் வகித்து வந்திருக்கின்றன. துறவியின் முன்னிலையில் வேந்தனும் துரும்புபோன்று அடங்கி ஒடுங்கி இருந்து வந்தது தேச லட்சியத்தைத் தெளிவுறுத்துகிறது. மன்னர்களின் வைபவங்கள் தத்தம் மாகாணங்களோடு நின்று விட்டன. பரதகண்டம் முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது ஏதோ சில காலங்களிலேதான். ஆனால் சமய ஆசாரியர் அநேகரது தெய்வீக ஆதிக்கம் தேசமெங்கும் எக்காலத்திலும் பரவி வந்திருக்கிறது. சமுதாய வளர்ச்சிக்கும் தேச முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத நன்னெறிகள் யாண்டும் மடாலயங்களினின்று உபதேசித் தருளப்பட்டன. பண்டைக்காலம் தொடங்கி இப்புண்ணிய ஸ்தாபனங்கள் ஆற்றியிருக்கும் அரும்பணிகளை நீக்கிவிட்டால் பரதநாட்டில் பண்பு ஒன்றும் இல்லாது போய்விடும்.